திங்கள், 12 நவம்பர், 2012

ஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி .. தங்கள் பங்காளியை தாங்களே

எத்தனை பேரை ஓட ஒட சுட்டீர்கள். வன்னியில் தங்கள் உயிரைக்காக்க தப்பி ஓடியவர்களைச் சுட்டார்கள் புலிகள். அதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. பரிதி மட்டும் தன்னுடைய உயிரைக் காக்க ஓடினாரோ? பரிதிக்கு மட்டும் பரிதாபப்படுகிறீர்கள். உங்களுடைய ஆட்கள்தான் பரிதியைக் கொன்றார்கள்.
பிரபாகரன் சுடும்போது ஏன் என்னைச் சுடுகிறீர்கள் என்று அல்பிரெட் துரையப்பா கேட்டார். நீங்கள் துரோகி பட்டம் கொடுத்து சுட்டுக் கொன்றவர்கள் எல்லோரும் நிமிர்ந்து நின்று குண்டு வாங்கினார்களோ? தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிக் கொண்டுபோன பாலா ஐயரை ஓட ஓடச் சுட்டீர்கள். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வரும்போது விமலேஸ்வரனை சைக்கிளில் வைத்து துரத்திச் சுட்டவர்கள் புலிகள். புத்தளத்தில் தன் பிள்ளைகளுடன் வந்து கொண்டிருந்த பவான் என்பவரை சுட்டு கொன்றுவிட்டு உங்கள் அப்பா செத்துப் போனார் என்று அம்மாவிடம் சொல்லுங்கள் என்று சொன்ன கொடூரம் நாங்கள் மறந்துவிடவில்லை. கேதீஸ் லோகநாதனை ஓட ஓட சுட்டவர்கள் புலிகள். ஒரு பெண், ஒரு டாக்டர்,ஒரு பேராசிரியை என்றும் பாராமல் ராஜினி திராணகமவைச் சுட்டவர்கள் புலிகள். வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்த பெண்ணை பொம்மை வெளியில் வைத்து துரத்தித் துரத்தி சுட்டார்கள் புலிகள்.வசந்தன் என்னைச் சுடாதே என்று கெஞ்சக் கெஞ்ச ஆலய வழிபாட்டிற்குச் சென்ற மகேஸ்வரன் எம்பியை சுட்டவர்கள் புலிகள். கதிகாமர்,பத்மநாபா போன்றவர்களைச் சுட்டுக் கொன்றபோது விருந்துண்டு மகிழ்ந்தீர்கள். பேசச் சென்றபோது உள்ளே அழைத்து தேனீர் கொடுத்தவர் அமிர்தலிங்கம்,நயவஞ்சகமாக நடித்து அமிதலிங்கத்தையும்,யோகேஸ்வரனையும் அவர்கள் மனைவியரின் முன்னால் சுட்டுக் கொன்றவர்கள் புலிகள். யோகேஸ்வரனின் மனைவி சரோஜினியைக் கொன்றவர்கள் புலிகள். பாரிஸ்  சபாலிங்கம் வீட்டுக்கு அண்ணே ஒரு உதவி என்று கேட்டு கதவை அவர் திறந்ததும் மனைவி மகன் முன்பாகவே  சுட்டு கொன்றீர்கள்  இராணுவம் போல் வேடமிட்டுச் சென்று மகேஸ்வரி வேலாயுதத்தை அவர் தாயார்,சகோதரர்களின் முன்னால் வைத்து சுட்டுக் கொன்றவர்கள் புலிகள். அதிபர் ஆனந்தராஜா,அதிபர் இராசதுரை,அதிபர் சிவகடாட்சம் என்று புலிகள் ஓட ஓடச் சுட்டுக் கொன்றவர்களின் பட்டியலை எழுத இங்கு பக்கங்கள் போதாது.
தங்கள் பங்காளியை தாங்களே சுட்டுக் கொன்றுவிட்டு யாரையோ குற்றம் சாட்டி,ஓட ஓடச் சுடப்பட்டார் பரிதி என்று செண்டிமெண்டல் காட்டுகிறீர்கள், பரிதிக்கு மட்டும் தான் குருதி இருக்கிறது,பரிதிக்கு மட்டும்தான் உயிரில் ஆசை மற்றவர்களுக்கு உயிர் மேல் ஆசை இல்லை. கொலையைக் கண்டிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும்.அருகதை வேண்டும். பெண்கள்,முதியவர்கள், கர்ப்பிணிகள்,குழந்தைகள் படித்தவர்கள், அறிவாளிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள், ஆசிரியர்கள்,முஸ்லிம்கள் என்று எண்ணிலடங்காது தமிழர்களைக் கொன்றழித்த கூட்டம், சாப்பாட்டிற்குள் மயக்க மருந்து போட்டு நித்திரைப்பாயில் வைத்துக் கொன்றதெல்லாம் மறந்துவிட்டீர்களோ? கதறக் கதற உயிருடன் ரயர் போட்டு கொழுத்தியதெல்லாம் மறந்துவிட்டீர்களோ? இன்று பரிதியை தாங்களே கொன்றுவிட்டு நீலிக் கண்ணீர் வடித்து ஒப்பாரி வடிக்கின்றீர்கள்.
The Sri Lankan Embassy in France termed as “ridiculous” accusations that the military intelligence was behind the assassination of a former LTTE commander in France. Sri Lanka’s Ambassador to France, Dayan Jayatilleka, told The Sunday Leader that the French law enforcement authorities are investigating the incident.
Nadarajah Mathinthiran alias Parithi, an ex-LTTE commander who had left the movement in the early 90′s and later coordinated Tamil political activities in France since 2003, was killed on Thursday evening outside the office of the Tamil Coordinating Committee (TCC) in Paris.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக