திங்கள், 12 நவம்பர், 2012

ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்க பெயரினை மாற்ற கெஜ்ரிவால் முடிவு

புதுடில்லி: ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரினை மாற்ற சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக காந்தியவாதி அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று தனது இயக்கத்திற்கு புதிய பெயர் வைக்க உள்ளார்.
ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பில் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் கீழ் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் உறுப்பினராகவும் ஹசாரேயின் வலது கரமாக இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால் .இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டில்லியில்நடந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றிட முடிவு செய்யப்பட்டது.இதற்கு ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். தான் அரசியல் கட்சி துவக்குவதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து ஹசாரே குழு இரண்டாக பிரிந்தது. ஹசாரேவும் தனது குழுவை கலைத்தார்.http://www.dinamalar.com/
தற்போது புதிய குழுவினை அமைக்கும் முனைப்பில் ஹசாரே உள்ளார். இதில் மாஜி ராணுவ தளபதி வி.கே.சிங் , கிரண்பேடி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் குழு ஓருங்கிணைப்பாளர்காக அறிவித்தார்.இந்த சூழ்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், தனியாக ஊழலுக்கு எதிராக இந்தியா அமைப்பின் கீழ் , செயல்பட்டு கடந்த சில நாட்களாக, சோனியா மருமகன் வதேரா, மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷீத், பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரி, தொழிலதிபர்கள் அம்பானி சசோகதரர்கள் ஆகியோர் மீது பரபரப்பு குற்றச்சாட்டினை கூறியுள்ளார். இந்நிலையில் தனது ஊழலுக்கு எதிரானஇந்திய அமைப்பின் பெயரினை கைவிட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், காந்தியவாதி அன்னா ஹசாரே எனது குரு அவர் புதிய குழுவை துவக்க உள்ளார். எனவே அவரது ஆலோசனையில் பெயரில் அவரால் துவக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற இயக்கத்தினை நடத்த உள்ளதால் அந்த பெயரினை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.இதை தொடர்ந்து அவரே செயல்படுத்த வசதியாக ஊழலுக்கு எதிரா இந்தியா பெயரில் உள்ள இயக்கத்தினை கைவிட உள்ளேன். இனி அந்த பெயரில் எனது இயக்கம் செயல்படாது. அதற்கு பதிலாக பொது காரணங்களுக்கான ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற பெயரில் இயங்கும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக