சனி, 27 அக்டோபர், 2012

SunTV ஐ.பி.எல் அணியை அன்டர்-த-டேபிள் அன்பளிப்பாக பெற்றது” திடீர் குற்றச்சாட்டு!

Viruvirupu
சன் டிவி குழுமம், ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணியை வாங்கியுள்ளதில் அன்டர்-த-டேபிள் டீல் ஒன்று உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார், முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி.
பி.சி.சி.ஐ. (BCCI – Board of Control for Cricket in India) தலைவர் சீனிவாசனுக்கும், கலாநிதி மாறனின் சன் குழுமத்துக்கும் இடையே உள்ளது இந்த ரகசிய டீல் என்பது, அவரது குற்றச்சாட்டு. “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் நட்பு நிறுவனமான சன் டிவி குழுமத்திற்கு, புதிய ஐ.பி.எல். அணியின் உரிமம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது” என்கிறார், இந்த முன்னாள் தலைவர்.

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, விளையாட்டு வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் பி.சி.சி.ஐ.-யின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், அந்த அணி ஐ.பி.எல். குழுவில் இருந்து நீக்கப்பட்டது. அதையடுத்து, ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல். அணியின் ஏலம் மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கலாநிதி மாறனின் சன் டிவி குழுமம், புதிய அணியின் உரிமத்தை வாங்கியது. ஏலத்தில் இவர்கள் பிட் பண்ணிய தொகை, ஆண்டிற்கு 85.05 கோடி ருபா. அந்த தொகைக்கே உரிமம் கிடைத்தது.
இந்த நிலையில் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி, இந்த ட்ரான்சாக்ஷனில் அன்டர்-த-டேபிள் டீல் ஒன்று உள்ளது என்ற குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி உள்ளார்.
லலித் மோடி என்ன சொல்கிறார்? “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் நட்பு நிறுவனமான சன் டிவி குழுமம், புதிய ஐ.பி.எல். அணி ஒன்றை வாங்கலாம் என்ற சாத்தியத்தை கடந்த 3 மாதங்களாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, அதுதான் நடந்திருக்கிறது. சன் டிவி குழுமத்துக்கு ஐ.பி.எல். அணி ஒன்றை வழங்க வேண்டும் என்ற சீனிவாசனின் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது.
இதைவிட ஒரு பெரிய ஊழலை எங்கும் பார்க்க முடியாது.
ஒரு ஐ.பி.எல். அணியை வாங்க சகாரா, 370 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது. ஆனால் சன் டிவி குழுமத்திற்கு இவ்வளவு குறைந்த விலைக்கு அணி கிடைத்துள்ளது. அது எப்படி?” என்கிறார் மோடி.
“இருந்து பாருங்கள், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் நிச்சயமாக, இந்தியன் சிமெண்ட்ஸின் கீழ் தான் நடைபெறும்” என்றும் அடித்துக் கூறுகிறார், மோடி. இந்தியன் சிமெண்ட்ஸ், பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனுக்கு சொந்தமான நிறுவனம்.
“கலாநிதி மாறன் சீனிவாசன் இடையிலான டீலை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சன் டிவி குழுமம், மற்றும் இந்தியன் சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பொதுவான பங்குத்தாரர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இரு நிறுவனங்களுக்கும் நிச்சயம் பொதுவான பங்குத்தாரர்கள் இருப்பார்கள். அவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டாலே போதும், மர்மம் வெளிப்பட்டுவிடும்” என்று லலித் மோடி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக