சனி, 27 அக்டோபர், 2012

சொத்து பரிமாற்றம்?? விஜயகாந்த் குடும்பத்தாருடன் சுந்தர்ராஜன் MLA

மக்களையும், தெய்வத்தையும் நம்பும் விஜயகாந்தை நம்பி;மோசம் போனேன் : சுந்தர்ராஜன் புலம்பல்மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் கடந்த 6 மாதமாக விஜயகாந்த் குடும்பத்தாருடன் கருத்து மோதல் ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகியே காணப்பட்டனர்.இந்த நிலையில் இருவரும் தமிழக முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று (26/10/2012) காலை சந்தித்தனர்.இச்சந்திப்பு குறித்து சுந்தர்ராஜன்,’என் தொகுதியில், கால்வாய், பாலங்கள் கட்டுவது தொடர்பாக முதல்வரை சந்தித்து, 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தேன்.முதல்வரை முதல் முறை சந்தித்தாலும், நல்ல மரியாதையுடன் நடத்தினார். ஆனால், 50 ஆண்டுகாலம் நண்பராக இருந்தவர், என்னை அவமானப்படுத்துகிறார். குடும்ப ஆட்சி என்று கோஷம் போடும், அவரது கட்சியில் மட்டும் என்ன நடக்கிறது. இதை கட்சியில் உள்ள அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்.மக்களையும், தெய்வத்தையும் மட்டுமே நம்புவதாக விஜயகாந்த் கூறுகிறார். ஆனால், 50 ஆண்டுகள் அவரை மட்டுமே நம்பியதற்கு இப்போது நான் பாடம் கற்று விட்டேன்.& நான் விஜயகாந்திடம் சொத்தை எதிர்பார்க்கவில்லை; நல்ல நட்பைத்தான் எதிர்பார்த்தேன். நண்பர்களாக இருந்தவர்களுக்கே, கட்சியில் இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு, என்ன நிலை ஏற்படும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஐந்து ஆண்டுக்கு முன்பு வந்த, இளங்கோவன், பார்த்தசாரதிக்கு கிடைக்கும் மரியாதை கூட, 50 ஆண்டு கால நண்பனான எனக்கு கிடைக்கவில்லை. நட்பிற்காகவும், மனித தன்மைக்காகவும் தான், சமீபத்திய கட்சி விழாக்களில், அவமானத்தை தாண்டியும் பங்கேற்றேன். ஆனால், உரிய மரியாதை கிடைக்கவில்லை.எனக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்காகத் தான், முதல்வரை சந்திந்தேன். மக்கள் பிரச்னைக்காக, முதல்வரை சந்திக்க, கட்சி தலைமையிடம் அனுமதி பெற தேவையில்லை. கட்சி பதவியை பறித்தால், எனக்கு கவலையில்லை.சட்டபை கூட்டத் தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் தான் உட்காருவேன். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் என் மனநிலையில் இருப்பதால், அவர்களால் எனக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னிடம் இருந்த சொத்து, பரிமாற்றம் செய்யப்பட்டதா என்பதை பற்றி, என்னிடம் கேட்காதீர்கள். ஊத்துக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்து, நீங்களே தெரிந்து கொள்ளலாம். அதைத் தவிர, வேறு எதையும் என்னால் சொல்ல முடியாது’’என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக