வியாழன், 4 அக்டோபர், 2012

Kingfisher ஊழியரின் மனைவி தற்கொலை ஊதியம் வராததால்

 Kingfisher Employee S Wife Commits Suicide ஊதியம் வராததால் குடும்பம் நடத்த வழியில்லாமல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியரின் மனைவி தற்கொலை

டெல்லி: ஊதியம் இல்லாதததால் பெரும் கஷ்டத்தில் தவித்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கணவருக்கு ஊதியம் வராததால் வீட்டில் ஏற்பட்ட கஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிரவுண்ட் ஸ்டாப் ஆக பணியாற்று வருபவர் மானாஸ் சக்ரபர்த்தி. இவரது மனைவி சுஷ்மிதா (45) இன்று டெல்லியில் மங்கள்புரி பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், கணவருக்கு 4 மாதமாக ஊதியம் வரவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியவில்லை, பெரும் கஷ்டம் நிலவுகிறது. இதைத் தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
பைலட்டுகள் உள்பட பெரும்பாலான கிங்பிஷர் ஊழியர்களுக்கு 4 முதல் 7 மாத சம்பள பாக்கியை அதன் உரிமையாளர் விஜய் மல்லையா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வழக்கம்போல் விரைவிலேயே ஊதிய பாக்கி தரப்படும் என்று கிங்பிஷர் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் மீண்டும் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த நிறுவனத்தின் கம்பென் செக்ரடரியாக பணியாற்றி வந்த பரத் ராகவன் அந்தப் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக