வியாழன், 4 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தி..மாமிச உணவு BJP தலைவர் ஈஸ்வரப்பா

 Karnataka Deputy Cm Eshwarappa Draw காந்தி ஜெயந்தி..மாமிச உணவு திருவிழாவில் வகையாய் சாப்பிட்ட கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

தீவிர ஆர்எஸ்எஸ்காரரான ஈஸ்வரப்பா கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவராவார். முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுடன் தீவிர மோதலில் இருந்து வருகிறார். இவர் கட்சியின் மத்தியத் தலைமையின் ஆதரவு உண்டு.
இந் நிலையில் காந்தி ஜெயந்தியன்று தனது சொந்த ஊரான ஷிமோகாவில் நடந்த படூதா என்ற மாமிச உணவு விழாவில் கலந்து கொண்ட ஈஸ்வரப்பா வெரைட்டிகளை ஒரு கை பார்த்துள்ளார். இது குறித்து அவரது உறவினர் ஒருவரே வெளியே பெருமையாக சொல்லி, அவரை வம்பில் மாட்டி விட்டுள்ளார்.
இதையடுத்து ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரசார் கர்நாடக ஆளுநரிடம் பரத்வாஜிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், இதை ஈஸ்வரப்பா வன்மையாக மறுத்துள்ளார். நான் காந்தி ஜெயந்தியன்று எந்த மாமிச விழாவிலும் கலந்து கொள்ளவில்லை, மாமிசத்தையும் உண்ணவில்லை. இந்தத் தகவல் முழுப் பொய் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக