வெள்ளி, 19 அக்டோபர், 2012

மிஸ்டர் கெஜிர்வால்! சரத்பவார் குடும்பத்தினரின் முறைகேடு பற்றி வாய் திறக்காதது ஏன்?

 Arvind Kejriwal Suppressed Sharad Pawar Scam
மும்பை: மகராஷ்டிரா மாநில நீர்ப்பாசனத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பாஜக தலைவர் நிதின் கத்காரி மீது புகார் கூறும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் ஏன் மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினர் முறைகேடு பற்றி வாய்திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியை எழுப்பியவர் வேறு யாருமல்ல.. கெஜ்ரிவாலின் முன்னாள் சகாவான ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் ஒய்.பி.சிங்தான்!
கத்காரி மீது புகார்
மகாராஷ்டிரா மாநில நீர்ப்பாசனத் திட்டத்தில் பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு தொடர்பிருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் மகாராஷ்டிரா மாநில அரசு விதிகளை மீறி 100 ஏக்கர் நிலத்தை கத்காரிக்கு கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
கெஜ்ரிவால் மீது திரும்பிப் பாய்ந்த அஸ்திரம்

ஆனால் இந்த முறைகேடுகளில் மட்டுமின்றி மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினரின் ஏராளமான முறைகேடுகள் தொடர்பாக தாம் கொடுத்த ஆதாரங்களை படுலாவகமாக மூடி மறைத்துவிட்டார் கெஜ்ரிவால் என்று போட்டு உடைத்திருக்கிறார் அவரது முன்னாள் சகாவான ஒய்.பி.சிங்.
கெஜ்ரிவாலிடம் ஒய்.பி.சிங் கொடுத்த சரத்பவார் குடும்பத்தினரின் முறைகேடுகள் என்ன?
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் லவாசாவில்341 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகள் லீசுக்கு லேக் சிட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு வழங்கினார். இதற்கு மாத வாடகையாக ரூ23 ஆயிரம் மட்டும் வசூலிக்கப்பட்டடு இந்த நிறுவனத்தில் சரத்பவாரின் மகள் சுப்ரியாவுக்கும் அவரது கணவர் சதானந்தாவுக்கும் 20.81 விழுக்காடு பங்குகள் இருக்கின்றன. 2006-ம் ஆண்டு இருவரும் தங்களது விற்பனை செய்கின்றனர். 2008-ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்று இருவரது பங்கு மதிப்பும் ரூ10 ஆயிரம் கோடி என மதிப்பிட்டிருக்கிறது. இந்த 341 ஏக்கர் நிலமும் விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு பலவந்தமாக பறிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒய்.பி.சிங்கின் புகார். இது தொடர்பான ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் கொடுத்திருந்தேன். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் இதனை மறைத்துவிட்டார் என்கிறார் ஒய்.பி.சிங்.
கத்காரி மீது புகார் கூறிய கெஜ்ரிவால் ஏன் சரத்பவார் குடும்பத்தினர் பற்றிய ஊழலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக