புதன், 24 அக்டோபர், 2012

சூர்யா-கௌதம் லடாய்: இமிடியட் ரிலீஃப் கேட்டால், இடியாப்பத்தில் பங்கு கேட்கிறார்!


Viruvirupu
மாற்றான், “மாட்டேன்.. போ” என்று சொல்லிவிட்டதில் அப்செட்டாகியிருக்கும் சூர்யா, அவசரகதியில் ஒரு வெற்றிப்படம் கொடுக்கும் ஆவலில் இருக்க வேண்டும். அதையடுத்து, சுற்றும் முற்றும் பார்த்ததில், சறுக்க விடாத வேட்பாளராக தெரிந்திருக்கிறார் கௌதம் மேனன்.
இதையடுத்து, மற்றொரு ‘காக்க காக்க’ உருவாக்கலாமா என்று ஒரு ரவுண்ட் பேச்சுக்கள் நடந்தன.
கௌதம், எதற்கும் தயாரான ஆள். சூர்யாவுக்கு என்ன, சூர்யா அப்பா சிவகுமாருக்கே கதை வைத்திருக்கிறார். உற்சாகமாக பேச்சுக்கள் தொடங்கின.
ஆச்சரியமாக, தனது சம்பளத்தில் சில ‘சி’களை தள்ளுபடி செய்யவும் சூர்யா தயாராக இருந்திருக்கிறார். அந்தளவுக்கு மாற்றான் புரட்டி எடுத்துவிட்டது. சூர்யாவுக்கு தேவை இமிடியட் ரிலீஃப்!
எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்த இந்த ப்ராஜெக்ட் இப்போது, ட்ராப்பாம்! காரணம், ஒரு படத்தை முடிக்க கௌதம் கேட்ட கால்ஷீட் நாட்களின் எண்ணிக்கையில், சூர்யா இரண்டு படமும் முடித்து, இடியாப்ப விளம்பரங்கள் இரண்டிலும் நடித்து முடித்து, மூக்குப்பொடி டப்பா விளம்பரத்துக்கும் மூன்று நாள் மீதமிருக்குமாம்!
“என்னங்க இவர், இமிடியட் ரிலீஃப் தேடிப் போனால், இடியாடிக்காக டேட்ஸ் கேட்கிறார்?” என்ற காமெண்டோடு சூர்யா கதையை முடித்துக் கொண்டார் என்கிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக