புதன், 24 அக்டோபர், 2012

15 புதிய முகங்கள்? பிரதமர் மன்மோகன் சிங் முடிவு

வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதை அடுத்து பல்வேறு முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம் அடைந்ததால் மேலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகள் முக்கிய அமைச்சர்கள் பதவியைக் கேட்டு நிர்பந்திப்பதால், எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் மத்திய அரசு குழம்பியுள்ளது.இதற்கிடையே, சரியாக செயல்படாத அமைச்சர்களை கட்சிப் பணியாற்ற அனுப்பிவிட்டு புதிய நபர்களை அமைச்சரவையில் சேர்க்க சோனியா தரப்பு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக