திங்கள், 1 அக்டோபர், 2012

மின்வெட்டு தீபாவளி..இனிமே பட்டாசுக்கு பதில் மின்சாரம் கொடுக்கலாம்

 அதிமுக அரசின் தீபாவளி பரிசு பதினாலு மணி நேர மின்வெட்டு ,இதில் நாற்பது நாடாளுமன்ற தொகுதியையும் வென்று பிரதமர் ஆவதாகவும் எல்லா அமைச்சர்களும் தாங்கள் தான் அடுத்த முதல்வர் என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.இதில் முதல் விக்கெட் சபாநாயகர்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில், தினமும், 14 மணிநேரம் மின்தடையால், தமிழகம் முழுவதும் தொழில் நகரங்களில், 72 ஆயிரம் கோடி ரூபா# மதிப்பிலான அத்தியவாசிய பொருட்கள், தளவாடங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விகுறியாகியுள்ளது. தமிழகத்தில், 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிக்க, ஒரு வாரமாக, சென்னை தவிர பிற பகுதிகளில் தினமும், 10 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது.


முடக்கம்
இதனால், தமிழகத்தின் தொழில் நகரங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள், தளவாடங்கள் உற்பத்தி முடங்கியுள்ளன. கோவை பகுதிகளில் விவசாயத்துக்கு தேவையான மோட்டார், வீட்டு உபயோக பொருள் உற்பத்தி, தொழிற்சாலை மற்றும் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி முடங்கியுள்ளன.கொங்கு மண்டலத்தில் பல லட்சம் கைத்தறி, விசைத்தறி கூடங்கள் உள்ளன. மின்தடையால் தறிகளில் ஆடைகள் உற்பத்தி பாதித்துள்ளது. திருப்பூர் சுற்றுப்பகுதியில் சிறிய நிறுவனங்களில், ஆயத்த ஆடைகள் உற்பத்தி, 60 சதவீதம் குறைந்து போனதால், வெளிநாட்டு ஆர்டர்களும் ரத்தாகி, உள்ளன.ஈரோடு, சேலம் மாவட்டங்களில், சிட்கோ சிறு தொழில் கூடங்கள் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளில் காகிதம், அட்டை, பிளாஸ்டிக் பைப், ரசாயன உரங்கள் உற்பத்தி பாதித்துள்ளது. திருச்சி, கரூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகன உற்பத்தி, நகை தயாரிப்பு, பெட்ஷீட் தயாரிப்பு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாங்கூழ் உற்பத்தி, மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் நூற்பாலைகளில் உற்பத்தி பாதித்துள்ளது.

பாதிப்பு எவ்வளவு?

மின்தடையால் தொழில்நகரங்களில், கடந்த 10 நாளில் மட்டும், 72 ஆயிரம் கோடி ரூபா# மதிப்பிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக தொடர்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழில் நகரமான கோவை, திருப்பூரில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறி தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். திருப்பூர் நகரத்தில், பல இடங்களில், "வீடு வாடகை'க்கு கிடைக்கும் போர்டு தொங்குகிறது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பாதித்துள்ளது.தமிழக அரசு உடனடியாக போதிய மின்சாரம் வினியோகித்தாலும், மீண்டும் தொழிலாளர்களை வரவழைத்து, பழையபடி முழுவீச்சில் உற்பத்தியை துவங்கவே, பல மாதங்கள் ஆகும் என, தொழிலதிபர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில், தொழிலாளர்களுக்கு நடப்பாண்டு தீபாவளி, தித்திக்காத பண்டிகையாக மாறியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக