திங்கள், 1 அக்டோபர், 2012

Vidhya Balan: மம்மூட்டி ஜோடியாக நடிக்க அவகாசம் இல்லை

மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார் வித்யா பாலன். தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘மனசெல்லாம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் வித்யா பாலன்50 சதவீத ஷூட்டிங் முடிந்த நிலையில் இயக்குனருக்கும் வித்யா பாலனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அப்படத்திலிருந்து வித்யா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக த்ரிஷா நடித்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திய வித்யா பாலன் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். இப்படத்துக்கு பிறகு அவரை தமிழில் நடிக்க சில இயக்குனர்கள் அணுகியபோது நடிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிய உருமி படத் தில் அவர் நடித்தார். இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி ஹீரோ வாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலனை நடிக்க கேட்டார் இயக்குனர் சலீம் அகமத். ஆனால் இந்தி படங்களில் பிஸியாக இருப்பதால் மம்மூட்டி ஜோடியாக நடிக்க அவகாசம் இல்லை என்று கைவிரித்து விட்டார். இதேபோல் அமல் நீராட் இயக்கும் நட்சத்திரம் மலையாள படத்திலும்  நடிக்க உள்ளதாக வெளியான தகவலை வித்யாபாலன் மறுத்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக