செவ்வாய், 2 அக்டோபர், 2012

தமன்னாவுக்கு சதி செய்யும் அந்த நல்ல மனிஷன் யார்?

நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார்.
. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்று திருமணம் முடித்து, குழந்தை குட்டியென்று சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். அதனால் நம் காதலுக்கும் பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்தார்.
தமன்னாவிடமோ என் காதலை (பெற்றோரிடம்) சொல்ல நேரமில்லை... என்று பையா பட பாட்டை பாடிக் கொண்டிருந்தார் அந்த நடிகர்.

இதற்கிடையில் விஷயம் கேள்விப்பட்ட அப்பா, நடிகரை கண்டித்ததுடன் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவையும் போட்டிருக்கிறார். இந்த ஜோடியை வைத்து படம் எடுக்க நினைத்த முக்கிய புள்ளிகளிடமும் ‌வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தந்தைக்குலம். அதனால் அடுத்தடுத்து சினிமாவில் ஜோடி சேர வாய்ப்பில்லாமல் போனது அந்த ஜோடிக்கு. இப்போது நிஜத்திலும் ஜோடி சேர முடியாத அளவுக்கு நடிகருக்கு திருமணத்தை நிச்சயித்து விட்டனர்.

அதனால்தான் அம்மணி இனி தமிழ்ப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் 2009ம் ஆண்டு 5 படங்களில் நடித்த தமன்னா, 2010ல் 9 படங்கள் நடித்திருந்தார். திரைக்கு வந்த ஹிட் படங்களில் எல்லாம் தமன்னா தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்தது.
ஆனால் தற்போது தமன்னாவே தமிழ் படத்தில் தான் நடிக்க முடியாமல் இருப்பதற்கு யாரோ சதி செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். யார் அந்த நல்ல மனிஷன் ? வாய் திறந்தால் நேர்மை நாணயம் ஒழுங்கு போதாகுறைக்கு தற்போது இலக்கியம் தமிழ் என்று வேறு முழங்கி தள்ளும் அந்த மனிதர் எத்தனை நாள் தமன்னாவை தமிழுக்கு வராமல் தடுக்க முடியும் காலம் பதில் சொல்ல வேண்டும்
 http://www.tamilnadutalk.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக