செவ்வாய், 2 அக்டோபர், 2012

வைகை பட தயாரிப்பாளர் கொலை: கூலிப்படையினர் 3 பேர் சரண்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபரும், அண்மையில் வைகை என்ற படத்தின் தயாரிப்பாளருமான பி.பி.ஜி.குமரன் நேற்று காலையில் வெடி குண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடன் காரில் சென்ற உதவியாளர்கள் மதியழகன், சங்கர் ஆகியோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.வைகை பட தயாரிப்பாளர் 
Chennai: In an attack that was no less than a scene from a commercial film, a gang of 20 armed men killed film producer by hurling country-made bombs at his car in full public view.
 According to reports, PPG  Kumaran, who is also a panchayat councillor of Sriperumbudur town was attacked by assailants in fron of the panchayat office on Monday. 
 The 35-year-old businessman had recently produced Tamil film 'Vaigai' and was an independent councillor in Pillaipakkam town panchayat.
தொழில் போட்டியில் கூலிப்படையினரை ஏவி குமரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் 10 பேர் திட்டம் போட்டு அவரை தீர்த்துக் கட்டியுள்ளனர்.


இந்த கொலை சம்பவம் தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த கவுஸ் பாஷா, குன்றத்தூரைச் சேர்ந்த கலைமணி, பெரம்பூரைச் சேர்ந்த சாம்சன் ஆகிய 3 பேர் நேற்று மாலை 6 மணி அளவில் எழும்பூர் 13-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் சரண் அடைந்தனர்.
அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாளை மறுநாள் (4-ந்தேதி) 3 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போலீசார் அன் றைய தினமே காவலில் எடுக்கிறார்கள். இதற்கிடையே பி.பி.ஜி. குமரன் கொலை செய்யப்பட் டதற்கான காரணம் என்ன என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
33 வயதே ஆன குமரன் இளம் வயதிலேயே வியக்க வைக்கும் வகையில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் மிகப்பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார். பட்டப்படிப்பை முடித்ததும் புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்த அவர் பின்னர் அதில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.
பிறகு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் அவர் நீக்கப்பட்டார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9-வது வார்டில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
தனியார் தொழிற்சாலைகளில் பழைய இரும்புக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்துவந்த குமரனுக்கு அதில் நல்ல வருமானம் கிடைத்தது. இதை வைத்து பி.பி.ஜி. ரீசைக்கிளிஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
தொழிற்சாலை கழிவுகளை வாங்கி விற்பனை செய்வதில், குமரனுக்கும், குன்றத்தூர் கெலுத்திப்பேட்டையைச் சேர்ந்த வைரவன் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது. அரசியல் ரீதியாகவும் குமரனுக்கு எதிரிகள் இருந்தனர். இதனால் அவரை உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்து இருந்தனர்.
இதனால் குமரன், தகுந்த பாதுகாப்புடன் வெளியில் சென்று வந்தார். நேற்று காலையில் 2 கார்கள் முன்னே செல்ல, கடைசியாகத்தான் குமரனின் கார் சென்றது. ஆனால் கூலிப்படை கொலையாளிகள், பல நாட்களாக அவர் சென்று வந்த பாதையை நோட்டமிட்டு இக்கொலையை செய்துள்ளனர்.
குமரன் கொலை தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற ரவுடி மட்டும் சம்பவ இடத்தில் போலீசில் சிக்கினான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வைரவன் தூண்டுதலின் பேரில் குமரனை கொலை செய்தோம் என பிரவீன்குமார் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வைரவன் வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்து வேலூர் சிறையில் உள்ளார். இவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து குமரனின் உடல் நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய கூலிப்படையினரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் டி.எஸ்.பி. பாஸ்கரன், டி.எஸ்.பி. கஜேந்திரகுமார், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், சேகர், பஞ்சாட்சரம் ஆகியோர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக