வியாழன், 4 அக்டோபர், 2012

லாக் அப் டெத்,,விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மரணம்

எஸ்.ஜ. முனுசாமி, ஒரு விசாரணை ஸ்டேஷன் வரை வந்து விட்டுப்போ என கூட்டிச் சென்றிருக்கிறார். ஸ்டேசனில் அவரிடம் 70 பவுன் நகை திருட்டு வழக்கில் உனக்கு சம்பந்தம் உள்ளது ஒத்துக்கொள் என மிரட்டிய பேலீஸார் வெவ்கடேஷனைத் தாக்கி. 
மதுரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.  இவர் கடந்த 2010ல் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பிருந்த தால் அந்த வழக்கு பரமக்குடி நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.  அதற்கு ஆஜராகும் பொருட்டு கடந்த 2ந் தேதி மாலை பரமக்குடி வந்திருக்கிறார்.

அப்போது அவரை பரமக்குடி காவல்நிலைய எஸ்.ஜ. முனுசாமி, ஒரு விசாரணை ஸ்டேஷன் வரை வந்து விட்டுப்போ என கூட்டிச் சென்றிருக்கிறார். ஸ்டேசனில் அவரிடம் 70 பவுன் நகை திருட்டு வழக்கில் உனக்கு சம்பந்தம் உள்ளது ஒத்துக்கொள் என மிரட்டிய பேலீஸார் வெவ்கடேஷனைத் தாக்கியதாக தெரிகிறது.

          எனக்கும் அந்த நகைத்திருட்டுக்கும் சம்பந்தமில்லை 4 மாதங்களுக்கு முன்பு கோபி. என்பவரின் வீட்டில் செல் போன் லேப்டேப்களைத்தான் திருடினேன் என்று சொல்ல,  தொடர்ந்து அவனை ஒத்துக் கொள்ளச் சொல்லி கடுமையாகத் தாக்கியதில் வெங்கடேசன் மயக்கமடைந்த தாக தெரிகிறது.
  உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.ர் டாக்டர்கள் நாகநாதன் மற்றும் வெங்கடேஷ் அவரை சோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.    
    
   தகவலறிந்த வெங்கடேசனின் சகோதேரர் செந்தில் பரமக்குடி  J.M கோர்ட் நீதிபதி ரேவதியிடம், தன் தம்பியை போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் மரண மடைந்திருக்கிறார் என புகார் செய்ய,  நீதிபதியும் இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்திவருகிறார்.
         மரணமடைந்த வெங்கடேசனுக்கு முகம்மது நிஷா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் அர்ஜீன் என்ற மகனும் உள்ளனர். பரமக்குடியில் நடந்த இந்த லாக் அப் டெத் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.

                                        படங்கள் : பாலாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக