ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மேலும் 3 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெ உடன் நாளை சந்திப்பு? total 7?

மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மேலும் 3 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெ உடன் நாளை சந்திப்பு?

 3 More Dmdk Mlas Meet Jayalalitha Tomorrow சென்னை : தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எதிர்முகாமிற்கு சென்று வரும் நிலையில் விருதுநகர் எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நாளை மேலும் 3 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.
தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுந்தர்ராஜன், தமிழழகன் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதிமுகவின் ஆட்சியைப் பற்றி பாராட்டிய அவர்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக சந்திப்பு நடத்தியதாக கூறினர். இதற்கே தேமுதிகவில் லேசான நிலநடுக்கம் உருவானது.

இதனிடையே இன்று காலையில் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால் கட்சித்தலைவர் விஜயகாந்த் கொதிநிலைக்கே போய் பத்திரிக்கையாளர்களை கடித்து குதறிவிட்டார்.
தனது எதிர்கட்சித்தலைவர் பதவியை காப்பாற்ற விஜயகாந்த் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா. பாண்டியராஜனுக்கு நாளை போயஸ் கார்டனில் அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளதாம். அவருடன் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் அதிமுக தலைமையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 4பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள நிலையில் மேலும் 3 விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் விஜயகாந்த் நாளை முதல் எதிர்கட்சித்தலைவராக நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக