ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தொடரும் காதல் மரணத்துக்கு பிறகுமா?

 மரணத்துக்கு பிறகு காதல் தொடரும் என்ற கருவை வைத்து ‘என்றென்றும்’ படம் உருவாகிறது. இதுபற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான சினிஷ்.எஸ். கூறியதாவது: ‘என்றென்றும்’ படத்தின் ஸ்கிரிப்ட், Chaos தியரியை பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய மாற்றம் வாழ்க்கையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்படி யூகிக்க முடியாத பிரச்னைகளை கொண்டு வருகிறது என்பதை இப்படம் வலியுறுத்துகிறது. ஒரு ஆணும், பெண்ணும் வாழும்போதுதான் காதலிக்க முடியும். அவர்கள் இறந்துவிட்டால் காதலும் இறந்துவிடுவதுதான் நியதி. மாறாக இப்படத்தில் காதலர்கள் இறந்த பிறகும் அவர்களின் காதல் தொடரும் என்பதே கதை.
சதீஷ் ஹீரோ. பிரியங்கா ரெட்டி ஹீரோயின். தினா, தீப்பெட்டி கணேசன், மீரா கிருஷ்ணன், நிஷா கோஷல், பாலா, தேஜஸ் ஆகியோர் நடிக்கின்றனர். சரவணன் ஒளிப்பதிவு. இவர் நீரவ்ஷா, வாசன், விஜய் மில்டனிடம் உதவியாளராக பணியாற்றியவர். தரண் இசை.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கிளைமாக்ஸ் குன்னூர் கல்லறை தோட்டத்தில் படமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக