செவ்வாய், 25 செப்டம்பர், 2012

Director: பிரபலங்கள் வேண்டாம்.. கைக்கு அடக்கமான நடிகர்கள் போதும்!

பிரபலங்களை நம்பி படமெடுப்பதில் நம்ம பேர்தான் கெடுது. நம்ம கைக்கு அடக்கமான நடிகரா இருந்தா, நினைச்ச மாதிரி எடுக்க முடியுது, என்கிறார் சமீபத்தில் சூப்பர் ஹீரோ படமெடுத்த இயக்குநர்.
இந்தப் படத்தை இயக்குநர் தொடங்கியபோது அவர் மீது ஏக எதிர்ப்பார்ப்பு எழுந்தது. பல நடிகர்கள் அவரது அடுத்த படத்துக்கு அப்போதே துண்டு போட்டு வைத்திருந்தனர்.
ஜி, நீங்க எப்ப சொன்னாலும் நடிக்க ஓடியாந்துடறேன் என்று கூறிவந்தனர்.
ஆனால் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்துசொல்லி வைத்த மாதிரி எல்லோரும் எஸ்ஸானார்கள். இயக்குநர் இதை எதிர்ப்பார்த்தே இருந்தார்.

அதனால் கொஞ்சமும் சளைக்காமல், ஓரிரு படங்களில் நடித்த சின்ன ஹீரோக்களை கூப்பிட்டு டெஸ்ட் எடுத்து சட்டென்று ஒப்பந்தம் செய்து, சைலன்டாக அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம்.
பெரிய ஹீரோ வேணாம்பா.. நம்ம கைக்கு அடக்கமா நடிகர் இருந்தா, திரையில் பிரமாண்டமாய் திரைக்கதையை எடுக்கலாம், என சொல்லி வருகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக