செவ்வாய், 25 செப்டம்பர், 2012

லிபியா மக்கள் தீவிரவாத இயக்க முகாம்களுக்குள் புகுந்து அடித்து நொறுக்கி எரித்தனர்.

தீவிரவாத இயக்கங்களை ஓட விரட்டிய மக்களுக்கு ஹிலரி கிளின்டன் பாராட்டு!

Viruvirupu
சல்யூட்
“லிபியாவில் வெளிப்படையாக இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதற்கு, லிபிய அரசுக்கு அமெரிக்கா சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது” இவ்வாறு அமெரிக்கா சார்பில் அறிவித்துள்ளார், ஹிலரி கிளிண்டன்.
இந்த உதவிகள், லிபியாவில் இன்னமும் உள்ளதாக நம்பப்படும் கெமிக்கல் ஆயுதங்களை தேடி அழிப்பது, கடாபிக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில், பொதுமக்களிடம் தங்கிவிட்ட ஆயுதங்களை சேகரிப்பது ஆகியவற்றுடன், லிபியாவில் வெளிப்படையாக இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதற்கும் வழங்கப்படுகிறது என பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“லிபியாவில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளை தமது நகரில் இருந்து அடித்து விரட்டியதன் மூலம், பென்காசி நகர மக்கள் உலகத்துக்கே முன்மாதிரியாக உள்ளார்கள். மற்றைய பகுதிகளிலும் மக்கள் தாமாகவே முன்வந்து தீவிரவாத அமைப்புகளை விரட்ட வேண்டும்” எனவும் கூறியுள்ளார், ஹிலரி கிளிண்டன்.

பென்காசி நகரில் இயங்கிவந்த இரு தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த மக்கள், அந்த இயக்கங்களின் முகாம்களுக்குள் புகுந்து, அடித்து நொறுக்கி, முகாம்களை எரித்தனர். அதையடுத்து ஒரு தீவிரவாத இயக்கம் பென்காசி நகரில் இருந்து முழுமையாக விரட்டியடிக்கப்பட்டது. மற்றைய இயக்கத்தில் பெரும்பகுதி உறுப்பினர்கள் ஓடிவிட்டார்கள்.
மீதமாக உள்ளவர்கள் தமது முகாம்களை விட்டு வெளியேற இன்று மாலைவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக