வெள்ளி, 28 செப்டம்பர், 2012

கவர்ச்சி இல்லாவிட்டால் பிசினஸ் டல்லடிக்கிறது

இளமை ஊஞ்சல் படத்தை இயக்குகிறார் அரிராஜன். அவர் கூறியதாவது: சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பு உண்டு என்கிறார்கள். அந்த பார்முலா 50 சதவீதம்தான் வேலை செய்கிறது. நட்பு, காதல், குடும்பம் என எந்த கதையாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தால்தான் பிசினஸ் பேச வருகிறார்கள். இதை அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டேன்.
நல்ல படம் தருகிறேன் என்று கதைகளை திணிப்பதைவிட, ரசிகர்கள் விரும்பும் படங்களை தருவது வெற்றிக்கு உதவுகிறது. குடும்பம், காதல் படங்களை இயக்கியதையடுத்து யூத்களை கவரும் வகையில் ‘இளமை ஊஞ்சல் என்ற படம் இயக்குகிறேன். அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம். நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என 6 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களுக்குள் கவர்ச்சி போட்டியே நடந்திருக்கிறது. இது கதையோடு ஒட்டிய கவர்ச்சியாக இருக்கும். திணிக்கப்பட்ட கவர்ச்சியாக இருக்காது. ஹீரோயின்களும் கதையை புரிந்துகொண்டு தடை சொல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஒகேனக்கல், பெங்களூர், மைசூர், ஐதராபாத், மூணாறில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஒளிப்பதிவு ஜே.ஜி.கிருஷ் ணன். தயாரிப்பு எஸ்.ஆர்.மனோகரன். இசை கார்த்திக் பூபதி ராஜா. இவ்வாறு அரிராஜன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக