சனி, 8 செப்டம்பர், 2012

வைகோ-சீமானுக்கு அருவா தூக்க, தேடி வந்துள்ள அரிய, பெரிய வாய்ப்பு!

Viruvirupu
இலங்கை அரசு வெளியிட்ட தமிழகத்துக்கான பயண எச்சரிக்கையை நீக்குமாறு, தமிழக வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ள கடிதம் கிடைத்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வர்த்தக சங்கத்தின் கடிதத்தில், “இலங்கை அரசு வெளியிட்ட பயண எச்சரிக்கையின் காரணமாக, கணிசமான அளவில் வர்த்தக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை சார்ந்துள்ள பல்வேறு துறைகளில் 40 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் மீதான பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறையினன் செய்திக்குறிப்பு சொல்கிறது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, “தமிழக வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், தமிழகத்தில் நிலைமைகள் சீரடையவில்லை என்றே கருதுகிறோம். அதேவேளையில் நாமும் தமிழகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவதானித்து வருகிறோம்.
இலங்கை பிரஜைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாது என்ற உறுதிப்பாடு ஏற்படும் வரையில் இந்த பயண எச்சரிக்கை அமலில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ‘தமிழக வர்த்தக சங்கத்தின்’ அலுவலகம் தமிழகத்தில் எங்கே உள்ளது என்று வைகோவுக்கும் சீமானுக்கும் யாராவது தகவல் கொடுத்தால்… “மவனே, இனி கல்லு கிடையாது.. நேரே அருவாதான்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக