சனி, 8 செப்டம்பர், 2012

கிரானைட் கற்களுக்கு இடையில் ரகசிய அறை: 3 பெட்டகங்கள் பதுக்கல்

மேலூர்: கிரானைட் கற்களை அடுக்கி வைத்துள்ள "ஸ்டாக் யார்டு' பகுதியில் மிக குறுகலான ரகசிய அறை அமைத்து, மூன்று கன்டெயினர் அளவிலான பெட்டகங்கள் அடுக்கப்பட்டிருந்தது. சிறிது தொலைவில் கற்களுக்கு இடையில் இருந்த சிறிய இரும்பு பெட்டியில் காமராஜ் பல்கலை தேர்வு தாள்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கிரானைட் குவாரிகளில் தினசரி, புதிது புதிதாக ஏதாவது சிக்கிய நிலையில் உள்ளது. நேற்று இடையபட்டியில் உள்ள பி.ஆர்.பி., நிறுவனத்திற்கு சொந்தமான "ஸ்டாக் யார்டில்' மதுரை வடக்கு துணை தாசில்தார் நைனல் ராஜ்குமார் தலைமையில் கற்கள் அளவிடும் பணி நடைபெற்று வந்தது. ஒரு பகுதியில் அளந்து முடித்தவர்கள், மற்றொரு பகுதியில், ஒவ்வொரு கற்களுக்கும் இடையில் நுழைந்து அளந்து கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் மட்டும் ஒரு நபர் தொடர்ந்து நுழைந்து செல்லும் வகையில் சிறு, சிறு சந்து விட்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்று பார்த்த போது, ஒரு ரகசிய அறை இருந்தது. அதற்குள் இரண்டு பெரிய பணம் வைக்க பயன்படும் பெட்டகங்ளும், ஒரு சிறிய பெட்டகமும் இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக