புதன், 19 செப்டம்பர், 2012

முதலிரவில் மனைவியை கற்பழித்த கணவன் கைது

திருச்சியில், முதலிரவுக்கு சம்மதித்காத மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கணவனை, போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 32, ஆட்டோ டிரைவர். இவருக்கும், நாகை மாவட்டம், சீர்காழி புளிச்சங்காட்டை சேர்ந்த சரஸ்வதி, 27, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், 12ம் தேதி, திருச்சி வயலூரில் திருமணம் நடந்தது. < திருமணத்தன்று இரவு, வெங்கடேசன் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்துக்குள், சரஸ்வதி அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துவிட்டார். உறவினர்கள் சமாதானம் செய்த போதிலும், தனியறையில் படுத்து தூங்கினார். அதன்பின், சீர்காழியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கும், முதலிரவு நடத்த சரஸ்வதி சம்மதிக்கவில்லை என்பதால், தம்பதியினர் திருச்சி திரும்பினர். மறுநாள் காலை, வெங்கசேடனின் அக்கா வெங்கேடஷ்வரி உள்ளிட்ட பெண்கள், சமாதானம் கூறினர். அதன் பின், 17ம் தேதி இரவு, நல்ல நேரம் பார்த்து முதலிரவுக்கு நாள் குறித்தனர். அப்போதும், சரஸ்வதி வெளியே ஓடி வந்துவிட்டார். அதனால், கோபமடைந்த வெங்கடேசன், வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். மீண்டும் வீடு திரும்பிய வெங்கடேசன், சரஸ்வதியை அறைக்குள் இழுத்துச்சென்று, கட்டிலோடு சேர்த்து வைத்து கை, கால்களை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மயங்கிக் கிடந்த சரஸ்வதிக்கு, ரத்தப்போக்கும் அதிகமானதால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சிசிக்சை அளிக்க மறுக்கவே, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சரஸ்வதி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சரஸ்வதியின் அண்ணன் விமல்ராஜ், சோமரசம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக