புதன், 19 செப்டம்பர், 2012

தேர்தல் வந்தால் சந்திக்க காங்.தயார்

புதுடில்லி: பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதனை காங். சந்திக்க தயாராக உள்ளது என திக்விஜய் சிங் கூறினார். மத்திய அரசில் இருந்து திரிணாமுல் காங். கட்சி ‌வெளியேறுவதாக நேற்று மாலை மம்தா அறிவித்தார். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்கவிஜய் சிங் தனது டிவீட்டரில் கூறியதாவது: திரிணாமுல்காங். கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியதால் மத்திய அரசுக்கு ஆபத்தில்லை.
இந்த அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியினை நிறைவு செய்யும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஒ‌ரு ‌வேளை பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அதனை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. நாட்டின் நலனுக்காகவே அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனை நிறைவேற்றும் விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த வித நெருக்கடியும், அச்சுறுத்தலும் கிடையாது. இவ்வாறு திக்கவிஜய் சிங் கூறியுள்ளார்.
தேர்தல்வராது: பிருதிவ்ராஜ் சவான்: விநாயகர்சதூர்த்தியை முன்னிட்டு மும்பையில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவ்ராஜ்சவான் கூறுகையில், விலைவாசி உயர்வை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பது உண்மைதான் எனினும், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதுள்ளதே ., இதனை மக்கள் யாரும் எதிர்‌க்க வில்லை. எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக