வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மனைவியை பாலியல் டார்ச்சர் செய்தகணவரின் ஆணுறுப்பில் உதைத்துக் கொன்றார் மனைவி

பெங்களூர் அருகே ஆபாச வீடியோவில் வருவது போல தன்னுடன் உறவு கொள்ளுமாறு கூறி மனைவியை சித்திரவதை செய்தார் கணவர். இதனால் கோபமடைந்த மனைவி, தனது கணவரின் ஆணுப்பில் சரமாரியாக ஓங்கி உதைத்துக் கொலை செய்தார். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் ரூரல் மாவட்டம் ஹாரோஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வத் நாராயணச்சாரி என்ற 28 வயது சமையல்காரர். இவரது மனைவி பெயர் வித்யாஸ்ரீ. 22 வயதான இவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
அஸ்வத்துக்கு தினசரி வீட்டில் ஆபாச வீடியோ பார்ப்பது ஒரு பழக்கமாக இருந்துள்ளது. சிடியைப் போட்டு பாத்து விட்டு மனைவியை பாலியல் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவரது இம்சை தாங்க முடியாமல் தவித்து வந்தார் வித்யாஸ்ரீ. கிட்டத்தட்ட தினசரி பாலியல் பலாத்காரத்தை நடத்தி வந்துள்ளார் அஸ்வத்.

வழக்கம் போல அன்றும் இரவில் வீடியோவைப் போட்டுப் பார்த்துள்ளார் அஸ்வத். பின்னர் நள்ளிரவில் மனைவியை எழுப்பி படத்தில் வருவது போல தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் வித்யாஸ்ரீ.
இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது மனைவியை அடித்துள்ளார் அஸ்வத். அதைப் பார்த்து பொங்கி எழுந்த வித்யா, தனது கணவரை சரமாரியாக அடித்துள்ளார். மேலும் அவரது ஆணுறுப்பில் சரமாரியாக ஓங்கி ஓங்கி உதைத்துள்ளார். அதில் அலறித் துடித்தார் அஸ்வத். சுருண்டு விழுந்தார். சற்று நேரத்தில் அப்படியே மயங்கி விழுந்தார்.
ஆனால் கணவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து பயந்து போன வித்யா ஸ்ரீ மறுபடியும் எழுந்து வந்து அடிப்பாரோ என்ற பயத்தில் துணியை எடுத்து முகத்தை மூடியுள்ளார். அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செத்துப் போனார் அஸ்வத்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அதிகாலையில், அஸ்வத்தின் உறவினர்களுக்குத் தெரிய வந்து விரைந்து வந்தனர். வித்யாஸ்ரீயிடம் விசாரித்தபோது எனக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து விசாரணை நடத்தியபோது நடந்ததைக் கூறினார் வித்யாஸ்ரீ.
இதையடுத்து வித்யாஸ்ரீ கைது செய்யபப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக