வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கொழும்பு-மதுரை முதலாவது விமானம் நேற்று வந்தது!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த மே ரி மாதா பக்தர்கள், செபஸ்டியன்  சீமானின் குண்டர்களால்  விரட்டி அடிக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள், மதுரை விமான நிலையத்தில்  இருந்து முதலாவது சர்வதேச விமான சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கொழும்புவுக்கு, தமிழக வர்த்தகர் குழுவை ஏற்றிச் சென்றது.
தி.மு.க. பிரமுகர்களான மாறன் சகோதரர்கள் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், மதுரையில் இருந்து கொழும்புக்கான விமான சேவையை நடத்துகிறது. அரசியல் காரணங்களுக்காக, ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி மதுரை – கொழும்பு விமான சேவைக்கான தொடக்க நிகழ்ச்சி, நேற்று நண்பகல் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது.
முதலாவது விமானத்தில், தமிழகத்தில் இருந்து 77 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். இவர்களில் 48 பேர், தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் (Tamil Nadu Chamber of Commerce) உறுப்பினர்கள். இலங்கையுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த அவர்கள் கொழும்பு சென்றுள்ளார்கள்.

தமிழக வர்த்தக சங்க பிரதிநிதி, “கொழும்பு மதுரை விமான வழித் தடத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சிறப்பாக செயற்பட வேண்டும். மதுரை, மற்றும் மதுரையை சுற்றிய பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் இதனால் பெரும் பலன் அடைவார்கள்” என்று கொழும்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து பூண்டி எத்தனை கி.மீ. தொலைவில் உள்ளது என செய்தியாளர்கள யாரும் கேட்டதாக தகவல் இல்லை.
இந்த விமானம் கொழும்புவில் இருந்து மதுரை திரும்பியபோது, அதில் 46 பயணிகள் வந்து இறங்கினர். இவர்களில் அநேகர், இலங்கையில் வசிக்கும் இந்தியத் தமிழர்கள்.
ஆர். சரவணன் (50), “எனது தாத்தா மதுரை அருகே திருமங்கலத்தை சேர்ந்தவர். அதனால்தான், கொழும்புவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் முதலாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து இறங்கினேன்” என்றார். சரவணன், இலங்கை நகரம் கண்டியில், ஜூவல்லரி வர்த்தக நிலையம் ஒன்றுக்கு உரிமையாளர்.
மற்றொரு பயணியான உமாகாந்த் தேவராயன், இலங்கையில் மருந்து வர்த்தகம் செய்கிறார். இலங்கையில் பிறந்து வளர்ந்த இவரது மூதாதையர்கள், தமிழகத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள். தமது சொந்த ஊரை பார்க்கும் ஆவலில் மதுரை வந்து இறங்கியுள்ளார் இவர்.
ஸ்பைஸ் ஜெட், மதுரையில் இருந்து கொழும்புவுக்கு வாரத்தில் 7 நாளும் விமான சேவையை நடத்தவுள்ளது. விமான இலக்கம் SG 3314, மதுரையில் இருந்து மதியம் 12.30-க்கு கொழும்பு புறப்பட்டு செல்வதாக உள்ளது அவர்களது

Bookings for tickets is now open for SpiceJet flights starting Sept 20 from the newly inaugurated Madurai Airport to Colombo on its Q400.
 
Madurai is SpiceJet’s second destination connecting to the Sri Lankan capital. Presently, it operates direct fights between Colombo and Chennai.
The Bombardier Q400 NextGen turboprop aircraft can accommodate 78 passengers and is widely accepted as the best short-haul plane globally. 
“We are committed to provide an affordable air journey to the people without compromising ….,” SpiceJet CEO, Neil Mills said.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக