செவ்வாய், 18 செப்டம்பர், 2012

துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை

விடுதலை புலிகளை பற்றிய ஒரு தூரப்பார்வை 19.9.2012 தேதியிட்டு வந்த "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை அபி அப்பா அவர்கள த்னது இப்பதிவில் வெளியிட்டிருந்தார். .
 சோ அவர்கள் எழுதியது கீழே:
1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.
3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.
4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.
6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.
7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.
8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!
9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???
10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.


இப்போது டோண்டு ராகவன். புலிகள் ஜெயித்திருந்தால், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய விபரீதங்கள் இப்போதும் மன நடுக்கத்தையே கொடுக்கின்றன.

இப்போதைய நிலையில் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என சீன் போடும் பேர்வழிகள் தமிழர்கள் நலனுக்கு விரோதமாகவே உள்ளனர்ர் என்பேன்
.
பை தி வே அவரது அப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டும்தான் இது வரை உள்ளது. மீதியை பிறகு மட்டுருத்துவார் போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக