திங்கள், 6 ஆகஸ்ட், 2012

Priyanka Gandhi தீவிர அரசியலில் குதிக்கிறார்

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கிறார். முதல் கட்டமாக அவர், தன் தாயாரின் ரேபரேலி லோக்சபா தொகுதி பொறுப்புகளை கவனிக்க உள்ளார்.
பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலக பொறுப்பாளர்கள் அனைவரும், "பிரியங்கா எப்போதும், ரேபரேலி தொகுதி மக்களுடன் கலந்துரையாடி வருபவர்.
அதனால், இதில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை' என்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும், இனி பிரியங்கா, ரேபரேலி தொகுதிக்கு செல்வார் என்றும், அங்கு மக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்பார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு முற்பகுதியில், உ.பி., சட்டசபை தேர்தல் நடந்த போது, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில், பிரியங்கா தீவிர பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்கப் போவது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அவர் எப்போதுமே கட்சிக்கு ஆதரவாக இருப்பர். தன் சகோதரர் மற்றும் தாயாரின் தொகுதிகளில், அவர்களுக்கு உதவிகரமாக இருப்பவர்' என, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக