வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

நித்தியானந்தா – ரஞ்சிதா பாஸ்போர்ட்கள் டில்லி ஏர்போர்ட்டில் எப்படி சிக்கின?

Viru News,


நம்ம சுவாமி மற்றுமோர் தடவை முட்டாள்தனமாக சிக்கியுள்ளார். 
இம்முறை சுவாமியின் பாஸ்போர்ட், இவரது குழுவினர் 31 பேரின் பாஸ்போர்ட்டுகளுடன் சேர்த்து, டில்லி ஏர்போர்ட்டில் சிக்கியுள்ளது. மற்றைய 31 பேரில், நடிகை ரஞ்சிதாவும் அடக்கம்!
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து டில்லி வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தடம் எண் 6E-032 மூலம் வந்திறங்கிய நிதின் கௌசிக் என்ற நபரின் ஹான்ட் லக்கேஜை சோதனையிட்போது, அதில் 32 பாஸ்போர்ட்டுகள் அடங்கிய பார்சல் ஒன்று கிடைத்தது.
வழமையாக செய்யப்படும் எக்ஸ்-ரே சோதனை ஒன்றன் பின்னர், அவரது லக்கேஜை திறக்க முடிவு செய்திருந்தனர் டில்லி கஸ்டம்ஸ் அதிகாரிகள். பார்சலில் இருப்பவை பாஸ்போர்ட்டுகள் என்று தமக்கு தெரியாது என்று கௌசிக் கூறியிருக்கிறார்.
“காத்மண்டுவில் வைத்து ஒருவர் இந்த பார்சலை என்னிடம் கொடுத்தார். டில்லி ஏர்போர்ட்டுக்கு வெளியே ஒருவர் அதை என்னிடம் பெற்றுக் கொள்வார் என்று அந்த நபர் கூறினார்” என்பதே கௌசிக் திரும்ப திரும்ப கூறும் கதை.
இதை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் நம்ப தயாராக இல்லை.
அதேநேரத்தில் டில்லி ஏர்போர்ட் அரைவல்ஸ் பகுதிக்கு வெளியே எடுக்கப்பட்ட குளோஸ்ட் செக்யூரிடி கேமரா வீடியோவை செக் பண்ணியபோது, ஏர்போர்ட்டுக்கு வெளியே கௌசிக்கின் பெயர் அடங்கிய அட்டையை பிடித்தபடி ஒருவர் நின்றிருந்தது தெரியவந்துள்ளது.
கொளசிக் சிக்கிக் கொண்டதும், அந்த நபர் மாயமாகி விட்டார்.
பாஸ்போர்ட்களை பரிசோதித்து பார்த்தபோது, அவை போலியானவை அல்ல என்பது தெரியவந்துள்ளது. அவை நிஜமாகவே நித்தி, ரஞ்சிதா, மற்றும் குழுவினரால் எடுக்கப்பட்டவைதான்.
ஆனால், இவர்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதாக கூறப்படுகையில், பாஸ்போர்ட்கள், எதற்காக இந்தியாவுக்குள் வர வேண்டும்?
மதுரை இளைய ஆதீனம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து எஸ்கேப் ஆகப் போகிறார் என்று நாம் ஏற்கனவே விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம். எமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, காத்மண்டுவில் இருந்து பாங்காக் ஊடாக, தாய்லாந்தின் வடக்கு மலை நகரமான சாங்-மாய் செல்வதே அவரது திட்டம் என்றும் எழுதியிருந்தோம்.
நாம் எழுதியபடியே, இளைய ஆதீனமும், மாதாஜி ரஞ்சிதா மற்றும் குழுவினர் சகிதம் காத்மண்டுவரை சென்றிருக்கிறார். அதுவரை சரி. கைலாயம் செல்வதானால், அங்கிருந்து திபெத் செல்ல வேண்டும். ஆனால், இளையவர் காத்மண்டுவில் பிரேக் அடித்திருக்கிறார்.
ஏன் பிரேக் அடித்தார்? சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை உறுதிப்படுத்தியபின் இன்னும் சில மணி நேரத்தில் தருகிறோம்.
விறுவிறுப்பு.காமில் நாம் நித்தியின் எஸ்கேப் பிளான் பற்றி எழுதியபோது, குறிப்பிட்ட ஒரு விஷயம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ட்ராவல் ஏஜென்சி ஒன்று பற்றி அதில் எழுதியிருந்தோம். (அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
இப்போது மற்றொரு விஷயம். சுவாமிகளின் பாஸ்போர்ட்டுடன் சிக்கியுள்ள நிதின் கௌசிக் யார் தெரியுமா? பிரபல ட்ராவல் ஏஜென்சியில் பணிபுரியும் நபர்! கொஞ்சம் பொறுத்திருங்கள், முழு தகவல்களுடன் வருகிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக