வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

உலகின் மிகச் சிறந்த வீதியோர உணவகங்கள்!

Viru News
நம்மூரில் பெரிய ரெஸ்ட்டாரன்டுகளில் சாப்பிட்டாலும், கையேந்தி பவன்களில் சாப்பிடும் சுவை வராது என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். உங்களுடைய நினைப்புகூட ஒருவேளை அப்படித்தான் இருக்கலாம். அதில் உண்மையும் உள்ளது.
வீதியோர உணவகங்கள் நம்மூரில் மட்டும்தான் என்றில்லை. உலகெங்கிலும் உள்ளன. தாய்லாந்து மற்றும் மலேசியா நாட்டு சுற்றுலாத்துறைகள், தமது நாட்டு வீதியோர உணவகங்களில் ஒரு வேளையாவது உணவு உண்டு பாருங்கள் என விளம்பரம் செய்கின்றன. (இந்திய சுற்றுலாத்துறை அப்படி விளம்பரம் செய்வதில்லை)
எனது அனுபவத்தில் அட்டகாசமான வீதியோர உணவகங்கள் தெற்கு பிரான்ஸ், அம்ஸ்டர்டாம், இத்தாலியின் பல பகுதிகள், தாய்லாந்தின் பல பகுதிகள், சுவீடன் (செம விலை), தென் கொரியாவின் இன்சோன் ஆகிய இடங்களில் உள்ளன. மிக மோசமான வீதியோர உணவு சாப்பிட்ட இடங்கள், ரஷ்யா, உக்ரேன்.

உலகின் மிகச்சிறந்த வீதியோர உணவகங்கள் உள்ளதாக கணிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை தருகிறோம். போட்டோவில் கிளிக் செய்தால், அடுத்த போட்டோவுக்கு செல்லலாம்.
கீழேயுள்ள போட்டோ, தாய்லாந்தின் பாங்காக் நகரில் எடுக்கப்பட்டது: பார்த்துவிட்டு அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக