வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை

துபாய் கம்பெனியில் இன்டர்வியூக்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஈராக்கில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
இதன் மேனேஜர் ஹாஜ் (44). இந்த கம்பெனிக்கு செயலாளர் தேவை என கடந்த ஜனவரி மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்து துபாயில் தங்கியிருக்கும் எகிப்து நாட்டு இளம்பெண் ஒருவர், இன்டர்வியூக்கு சென்றார். மேனேஜர் ஹாஜ் இன்டர்வியூ நடத்தினார். ‘இது கொஞ்சம் வித்தியாசமான இன்டர்வியூ. நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்’ என்ற மேனேஜர், ஜாலியாக சில கேள்விகளை கேட்டார். அழகை ரசிக்கணும்; ஆராதிக்கணும்னு சொல்லிக் கொண்டே அந்த இளம்பெண்ணின் அழகை வர்ணித்து பேசத் தொடங்கினார். இதனால் உஷாரான இளம்பெண், அறையை விட்டு வெளியேற முயன்றார். பின்தொடர்ந்து வந்த மேனேஜர், ‘கதவு பூட்டப்பட்டிருக்கிறது. நீ தப்பிக்க முடியாது’ என்று கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.  பூட்டிய அறையில் சீரழிக்கப்பட்டது குறித்து போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ சோதனையில் இளம்பெண்ணை ஹாஜ் பலாத்காரம் செய்தது உறுதியானது. இந்த வழக்கில் துபாய் கிரிமினல் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மேனேஜர் ஹாஜ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக