திங்கள், 6 ஆகஸ்ட், 2012

திருப்பதி அர்ச்சகர்கள் பணம் பிடுங்குவதால் பூஜை ரத்தாம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவத்தின் போது நடைபெறும் சங்கல்ப பூஜை சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழு மலையான் கோயிலில், நாள் தோறும் மதியம் 12 மணியள வில் கல்யாண உற்சவம் நடப்பது வழக்கமாம். அதன்படி, திருமலை ஏழுமலையான் சன்னதியில் உள்ள சம்பங்கி பிரகார அரங்கத்தில் கல்யாண உற்சவம் நடைபெறும். இதில், ஆயிரம் ரூபாய் தரிசனச் சீட்டு மூலம் இணையர்கள் பங்கேற்பார்களாம். காலை 11 மணியளவில் கல்யாண உற் சவத்தில் பங்கேற்கும் பக் தர்களின் பெயர், கோத்திரம் மற்றும் விவரங்களை இணை யர்களிடம் அர்ச்சகர்கள் கேட்டு சங்கல்ப பூஜை நடத்துவார்களாம். ஆனால், நேற்று முன்தினம் முதல் சங்கல்ப பூஜை சேவை நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகை யில்,கல்யாண உற்சவ சேவைக் கான பயணச்சீட்டுகள் 400 மட்டுமே விற்கப்பட்டன. பக் தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 700 ஆக உயர்த்தப் பட்டது. இதனால், ஒவ்வொரு இணையருக்கும் சங்கல்ப பூஜை செய்வதால், கல்யாண உற்சவம் தாமதமாகிறது. மேலும், சங்கல்ப பூஜையில் அர்ச்சகர்கள் சிலர் பக்தர் களிடம் பணம் வசூலிப்பதாக வும், பணம் தர மறுக்கும் பக் தர்களிடம் அர்ச்சகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபடுவ தாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, கல்யாண உற்சவத் தின் போது சங்கல்ப பூஜை சேவை ரத்து செய்யப்பட் டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக