திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இந்தியில் ஸ்ருதிக்கு நல்ல படம் கிடைத்துவி்ட்டது



பிரபு தேவாவின் இந்தி ரீமேக் படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதி ஹாசனின் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லிவிட்டார்.
தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய முதல் படம் ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா'. இந்த படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரி்ல் வெளியானது. இந்த 2 மொழிகளிலுமே த்ரிஷா தான் நாயகி. இந்நிலையில் பாலிவுட்டில் ரீமேக் மன்னன் என்று பெயரெடுத்துள்ள பிரபுதேவா ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.

இதில் த்ரிஷாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை நாயகியாக்கிவி்ட்டார். இந்தியில் வாய்ப்பு தேடிய ஸ்ருதிக்கு நல்ல படம் கிடைத்துவி்ட்டது. இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் அல்லு அர்ஜுனை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க ஸ்ருதியை கேட்டுள்ளனர். ஆனால் பிரபுதேவா படத்தில் நடிப்பதால் அவர் தெலுங்கு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதற்கிடையே இந்தியிலும் தன்னையே பிரபுதேவா நாயகியாக்குவார் என்று நம்பியிருந்த த்ரிஷாவுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக