செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ராமதாஸ்-ஆனந்த விகடன் ஜெயலலிதா அவதூறு வழக்கு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது பற்றி விமர்சனம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதும் ஆனந்த விகடன் மீதும் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு கடந்த 13ம் தேதி பேட்டி அளித்து இருந்தார். அதில் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கி இருந்தது பற்றி விமர்சனம் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது சார்பில் வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியிட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ். மாதவன், மற்றும் செய்தியாளர் கே.ராஜா திருவேங்கடம் ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக