வியாழன், 12 ஜூலை, 2012

Shirdi சாய்பாபா பால் குடித்தாரா? பிராட்வேயில் பரபரப்பு



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதண்டையார்பேட்டை : பிராட்வேயில் சாய்பாபா சிலை பால் குடித்ததாக செய்தி பரவியதால் பக்தர்கள் திரண்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வே வரத முத்தப்பன் தெருவை சேர்ந்தவர் அசோக் (30). நகைக்கடை ஊழியர். இவரது மனைவி பவானி (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பவானி தீவிர சாய்பாபா பக்தர். வீட்டில் அரை அடி வெள்ளி சாய்பாபா சிலை வைத்து தினமும் பூஜை செய்து வந்தார். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல¢ பூஜை பொருட்களை எடுத்து வைத்தார். சாய்பாபா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். தலையில் இருந்து பால் வடிந்து வாய் அருகில் வந்ததும் மாயமானது. உடனே ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வாய் அருகில் கொண்டு சென்றார். அதுவும் காலியானது. சாய்பாபா பால் குடித்ததாக அந்த பகுதியில் செய்தி பரவியது. அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இது பற்றி பவானி நிருபரிடம் கூறுகையில், தீவிர பக்தரான என் வீட்டில் சாய்பாபா பால் குடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக