வியாழன், 12 ஜூலை, 2012

டிஆர்பி ரேட்டிங் Down ஒரு கோடி நிகழ்ச்சி முடிவுக்கு வரும்

சரியும் டிஆர்பி ரேட்டிங்!.. முடிவுக்கு வரும் 'கோடி' நிகழ்ச்சிகள்!!! ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது .
சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது
டி.ஆர்.பி ரேட்டிங் சரிய தொடங்கியதும் நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை ஒரு வழியாக ஓட்டி வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை அதிகபட்சம் ரூ. 12,50,000 பரிசுத் தொகை பெறப்பட்டிருக்கிறது. இரட்டையர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் போடப்பட்டது. தற்போது விண்ணப்பித்தவர்கள் பங்கேற்காமல் நிகழ்ச்சியை முடிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை 'கோன் பனேகா குரோர்பதியை' டப்பிங் செய்து போடப் போகிறார்களோ என்னவோ!.
நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் நடிகர் ரகுமான், நடிகை நதியா, நடிகை சுஹாசினி, நடிகர் மோகன் ஆகிய பழைய நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நட்சத்திரங்கள் பங்கு பெற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி பெற தொகையை வழங்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் ரூ.6,40,000 பெற்றவுடன் நிகழ்ச்சிக்கான நேரம் முடிந்தது என சூர்யா சொல்லியதைக் காண முடிந்தது.
விஜய் டிவி பாணியில் சன் டிவியும் தனது சீரியல் நாயகிகளை வைத்து சன் குடும்பம் நட்சத்திரங்கள் என 'கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' என நிகழ்ச்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. டிஆர்பி ரேட்டிங் சரிவதாலும் ரசிகர்களிடையே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு குறைந்து வருவதாலும் விரைவில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சியும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக