திங்கள், 9 ஜூலை, 2012

Greeley Haven செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!

The photo combined 817 images taken by the panoramic camera on the Opportunity. NASA releases 'spectacularly detailed' Mars panorama
The panorama was stitched together from component images taken between December 21, 2011, and May 8, 2012, when Opportunity was stationed on an outcrop nicknamed Greeley Haven.
Opportunity completed its 3,000th Martian day on July 2, and the US space agency marked 15 years of robotic presence on the Red Planet.
NASA's Curiosity rover, formally known as the Mars Science Laboratory but nicknamed a "dream machine" by NASA scientists, blasted off from Florida in November and is expected to land in early August.
The most advanced machine ever built with the aim of roaming the surface of Earth's nearest neighbour cost $2.5 billion to construct and launch, carries its own rock-analysing lab and aims to hunt for signs that life once existed there.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன.ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் நாசா அனுப்பியுள்ள Mars Exploration Rover Opportunity என்ற விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் மீது பொருத்தப்பட்ட பான்கேம் எனப்படும் பானரோமிக் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 817 புகைப்படங்களை இந்த கேமரா எடுத்துத் தள்ளியுள்ளது.செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது.
நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.
ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. 2வது படத்தில் செவ்வாய் கிரகத்தின் கிரேட்டர் அழகாக காணப்படுகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.
கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக