திங்கள், 9 ஜூலை, 2012

Best Bakery 14பேர் உயிரோடு கொழுத்தப்பட்டவழக்கில் 4 பேர் குற்றவாளிகள், 5 பேர் விடுதலை

 குஜராத் மாநிலம் கோத்ராவில் வன்முறை வெடித்தபோது 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி இந்த பேக்கரிக்குள் மோடி ஆதரவு  கும்பல் புகுந்தது. அங்கு புகுந்து வன்முறையில் அக்கும்பல் ஈடுபட்டது. பேக்கரியும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
மும்பை: குஜராத், பெஸ்ட் பேக்கரி எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் என்று மும்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கான தண்டனையையும அது உறுதி செய்துள்ளது. அதேசமயம், ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வதோதராவில் உள்ளது பெஸ்ட் பேக்கரி என்ற பேக்கரிக் கடை. குஜராத் மாநிலம் கோத்ராவில் வன்முறை வெடித்தபோது 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி இந்த பேக்கரிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அங்கு புகுந்து வன்முறையில் அக்கும்பல் ஈடுபட்டது. பேக்கரியும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பேர் உயிரோடு கொழுத்தப்பட்ட 
இதில் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின்னர் 21 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, இந்த சம்பவத்தில் தனது குடும்பத்தையே இழந்தவரும், சாட்சிகளில் ஒருவருமான ஜகீரா ஷேக், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கையும் மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த மஸ்கோவன் கோர்ட், 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் மற்ற 8 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 2006ம் ஆண்டு இந்த தீர்ப்பு வெளியானது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், தண்டனை விதிக்கப்பட்ட 9 பேர் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பைப் பிறப்பித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் மீதான குற்றத்தையும் உறுதி செய்த உயர்நீதிமன்றம், பெஸ்ட் பேக்கரி ஊழியர்களான, நான்கு அரசுத் தரப்பு சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் நால்வரையும் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் கையில் வாள்கள், உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்ததாக சாட்சிகள் நால்வரும் தெரிவித்திருந்தனர். இந்த நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.
தீர்ப்பை நீதிபதிகள் அறிவித்தபோது, விசாரணையில் மாபெரும் தவறுகளை காவல்துறை செய்துள்ளதாகவும் குஜராத் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்தனர். காயமடைந்த சாட்சிகளின் கூடுதல் சாட்சியங்களை போலீஸார் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்கள். ஆனால் அதைச் செய்யத் தவறி விட்டது காவல்துறை. இது மிகப் பெரிய தவறாகும் என்று சாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக