புதன், 25 ஜூலை, 2012

Chennai 130 கோடி மதிப்புள்ள 400 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை சவுகார் பேட்டையில் தங்கம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் சி.பி.அய் . அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மத்திய அரசின் உலோக வணிக கழகம் மூலம் இந்த நிறுவனம் 2007 முதல் 2009 வரை இறக்குமதி செய்த தங்கம் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது தங்கம் இறக்குமதியில் ரூ.18 கோடி வரை ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் கடநத மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கத்தை சி.பி.அய் . அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.130 கோடி.
வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வரவு.செலவு பற்றிய சரியான கணக்கு இல்லாமல் வைத்திருந்த ரூ.4 கோடி ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.அய் . வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக