பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை
விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நியமனத்துக்கு எதிரான மனு மீது
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கபப்ட்டுள்ளனர். பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜெயலலிதா வாக்குமூலம் அளித்துவிட்டார். ஆனால் சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்க பெரும் போராட்டமே நடந்து வருகிறது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மல்லிகார்ஜூனையா நியமித்ததே செல்லாது என்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தனிநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது
ஆனால் விடுவார்களா? மல்லிகார்ஜூனய்யா நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி கர்நாடக உயர்நிதிமன்றத்தில் நேற்று புதிய மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக