புதன், 25 ஜூலை, 2012

டீசல்,LPG சிலிண்டர் விலை உயர்கிறது?

பெட்ரோல் விலை நேற்று நள்ளிவு முதல் லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டதை அடுத்து, டீசல் மற்றும் சிலிண்டர் மீதான விலைகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
டீசல், சிலிண்டர் மற்றும் மண்ணெய்க்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை குறைக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆதலால் இதன் விலைகள் உயர்த்தப்படுவது உறுதியாகிவிட்டது. ஆனால் எப்போது, எவ்வளவு விலை உயர்வு என்பதுதான் முடிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக