செவ்வாய், 10 ஜூலை, 2012

பேராசிரியர் அன்பழகன் புதிய மனு ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: தினசரி விசாரணை நடத்த வேண்டும்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் ஜெயலலிதா, சசிகலா செயல்படுகின்றனர். பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா மீதான வழக்கை தினசரி நடத்த வேண்டும். வழக்கில் பலமனுக்களை தாக்கல் செய்வது தாமதப்படுத்துவதே நோக்கம் என்றும் மனுவில் கூறியுள்ளார்.திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக