செவ்வாய், 10 ஜூலை, 2012

Pranab Mukerjiக்கு எதிரான சங்மா மனுவை நிராரித்தது தேர்தல் ஆணையம்

பிரணாப் முகஜிக்கு எதிரான பி.ஏ.சங்மா மனுவை நிராரித்தது தேர்தல் ஆணையம்! இந்திய குடியரசுத் தலைவர் தேர்த-ல் காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். பிரணாப் முகர்ஜியின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், அந்த மனுவை மறு ஆய்வு செய்யுமாறு, பி.ஏ.சங்மா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

மனுத்தாக்க-ன்போது ரவீந்திர பாரதி சங்க தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்ததாகவும், பிர்பும் இன்ஜினியரிங் கல்லூரி துணைத் தலைவராக பிரணாப் இருந்ததாகவும் பி.ஏ.சங்மா புகார் கூறியிருந்தார்.இந்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக