செவ்வாய், 10 ஜூலை, 2012

கேரளாவின் திருட்டுத்தனம் Hariyana முதியவரின் 1 கோடி ரூபாய் லபக்

ரூ.1 கோடி பரிசுத் தொகை கேட்டு 80 வயது முதியவர் போராட்டம் லாட்டரியில் தனக்கு விழுந்த பணத்தை வழங்கக் கோரி, 80 வயது முதியவர் ஒருவர் கேரள தலைமைச் செயலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.;ஹரியானா மாநில துணி வியாபாரி கிஷன் சந்த். வியாபார விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரம் சென்ற அவர், கேரள அரசின் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். அதற்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது.இதையடுத்து, கேரள அரசை அணுகி, பரிசுத் தொகையை வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பரிசுத் தொகையை வழங்க அரசு மறுத்து வருகிறது.இதையடுத்து, லாட்டரியில் விழுந்த பணத்தை வழங்கக் கோரி, கேரள தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் கிஷன் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக