ஞாயிறு, 29 ஜூலை, 2012

மாணவி தீக்குளித்து தற்கொலை பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் மோகன மீனாள் (வயது 21). இவர் தொலை தூரகல்வி மூலம் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாகவும், மோகன மீனாள் தனது பெற்றோரிடம் இப்போது திருமணம் வேண்டாம். நான் தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியதாகவும், எனினும் பெற்றோர் தனது மகளுக்கு தொடர்ந்து மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன மீனாள் கடந்த 26.07.2012 அன்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். இந்நிலையில் மறுநாள் மாலை மோகன மீனாள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக