புதன், 11 ஜூலை, 2012

Billa 2 முதல் ஷோ டிக்கெட் ரூ 650!! ஒரு வாரம் ஃபுல்..

ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.
ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம்.
மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை.
இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் அவர் உன்னைப் போல் ஒருவனை இயக்கினாலும், அதில் கமலின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா இருவருக்குமே இது முதல் படம். எனவே அவர்களால் படத்துக்கு பெரிய பலன் கிடையாது.
இருந்தும் அஜீத் படம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை திரையரங்குகளில் பில்லா 2 க்கு ஒரு வாரத்துக்கான புக்கிங் முடிந்துவிட்டது.

பல இடங்களில் ப்ளாக்கில் ரூ 500 வரை இந்தப் படத்துக்கு டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அரங்கில் கவுன்டரிலேயே 650 ரூபாய்க்கு முதல் காட்சிக்கான டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக