புதன், 11 ஜூலை, 2012

நிதியமைச்சராகிறார் ப.சிதம்பரம்?: உள்துறை அமைச்சராகிறார் சுஷில்குமார் ஷிண்டே

 P Chidambaram Take Charge As Fin Min
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராக்கப்படுவார் என்று தெரிகிறது.
அப்பாடா ஒரு வழியா தாய் வீட்டுக்கு வந்தாச்சு ,இழவு உள்துறை போதுமைய்யா 
முன்பு நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தைத் தான் உள்துறை அமைச்சராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. நாட்டில் குண்டுவெடிப்புகள் அதிகரித்த நிலையில் சிவராஜ் பாட்டீலை தூக்கிவிட்டு உள்துறை பொறுப்பை சிதம்பரத்திடம் தந்தார்.
இந் நிலையில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி பதவி தேர்தலில் போட்டியிடுவதையடுத்து அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரெங்கராஜன் உள்பட பலரது பெயர்கள் அடிபட்டன.

ஆனால், நாடு இப்போது சந்தித்து வரும் தேக்கமான பொருளாதார நிலையில் சிதம்பரத்தையே நிதியமைச்சராக்கலாம் என சோனியா கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அலுவாலியா, ரெங்கராஜன் போன்றவர்கள் அதிகாரிகள், அவர்கள் அரசியல் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர்கள் என்பதால், அரசியல் பின் விளைவுகளையும் கருத்தில் கொண்டு செயல்படக் கூடிய நிதியமைச்சராக சிதம்பரமே இருக்க முடியும் என காங்கிரஸ் கருதுவதாகத் தெரிகிறது.
இதையடுத்து அடுத்த மாதத் துவக்கத்திலேயே சிதம்பரம் நிதியமைச்சராக பொறுப்பேற்பார் என்கிறார்கள். அடுத்த மாதம் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அவர் நிதியமைச்சராகிவிடுவார் என்கிறார்கள்.
இதற்கு முன் இரண்டு முறை நிதியமைச்சராக இருந்துள்ளார் சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே?:
இந் நிலையில் சிதம்பரத்துக்குப் பதிலாக மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராக்கப்படுவார் என்று தெரிகிறது.
பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவிகள், மகாராஷ்டிர முதல்வர் என பல முக்கிய பதவிகளில் இருந்த ஷிண்டே சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக