திங்கள், 9 ஜூலை, 2012

CBI க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ஏன் ராசாவுக்கு முந்திய உரிமங்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை?

 ஜாதி ஜாதி ஜாதி 

ஸ்பெக்ட்ரம் ஊழல்: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரும் மனு மீது விளக்கம் கேட்டு சிபிஐக்கு நோட்டீஸ்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2003-2007-ம் ஆண்டு வரை 51 உரிமங்களை தொலைத் தொடர்புத் துறை வழங்கியுள்ளது. அதே விதிமுறைகளை நானும் பின்பற்றி உரிமங்களை வழங்கினேன்.ஆனால் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் தமது பதவி காலத்துக்கு முன் வழங்கப்பட்ட 51 உரிமங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. வழக்கு விசாரணையில் பாரபட்சம் உள்ளது. ஆகையால் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஆ. ராசா கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஏகே பதக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்குமாறு சிபிஐக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏன் ராசாவுக்கு முந்திய உரிமங்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக