Viruvirupu,
அன்னா
ஹசரே குழுவினரின் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருகின்றது
என்று மீடியாக்களில் செய்தி வெளியானதை அடுத்து, தற்போது கூட்டம் அதிகமாக
துவங்கியுள்ளது. நேற்று உண்ணாவிரதம் நடைபெற்ற பகுதிக்கு சுமார் 7,000
பேர்வரை வந்திருந்தனர்.
முதல் 5 தினங்களும் மற்றையவர்கள் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று காலை அன்னா ஹசரேயும்,
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். “நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்காக
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. மிக
எளிமையான இந்த கோரிக்கையை நிறைவேற்றவே மத்திய அரசு தயங்குகிறது” என்றார்
அவர். “இந்த போராட்டம் எத்தனை நாட்கள் தொடரும்? நீங்கள் எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருப்பீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, “லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும். அதுவரை, அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் நான். ஆனால், மக்கள் என்னை லேசில் சாக விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
டில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. கூட்டம் குறைகிறது என மீடியாக்கள் செய்தி வெளியிட்டதாலோ என்னவோ, அன்னா ஹசரே குழுவினர் இந்தியா கேட் அருகே பேரணி ஒன்றையும் நடத்தினர். அதிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில் போராட்டம் சூடுபிடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக