திங்கள், 30 ஜூலை, 2012

மாணவி மானபங்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் உடைகளை அணிவதை
பெண்கள், மாணவிகள் தவிர்க்க வேண்டும் : சிரஞ்ஜீத் எம்.எல்.ஏ.
அசாம் மாநிலத்தில் கடந்த 9-ந்தேதி 16 வயது இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள், கொல்கத்தா புறநகரில் அமைந்துள்ள பரசாத் ரெயில் நிலையத்தில் 18 வயது மாணவி ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட கும்பல் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டது.பரசாத் ரெயில் நிலையத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியின் வீட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்ஜீத் சென்று ஆறுதல் கூறினார். இது அவரது தொகுதி பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,   ‘’பரசாத் ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அதே சமயத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது.

பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம். மினி ஸ்கர்ட், அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் உடைகளை அணிவதை பெண்கள், மாணவிகள் தவிர்க்க வேண்டும்’’ என்று கூறினார்.சிரஞ்ஜித் மேற்குவங்காள சினிமா துறையில் மெகா ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி மானபங்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரஞ்ஜீத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற பொறுப்பற்ற பதிலை அவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக