திங்கள், 30 ஜூலை, 2012

ரகசியம் லீக்: WAL-MART டில்லி அரசியல்வாதிகளுக்கு கொடுத்த $1.5 மில்லியன்!


Viruvirupu
இந்தியாவுக்குள் சூப்பர் மார்க்கெட்டுகளை துவங்குவதற்கு ‘தலைகீழாக’ நின்று முயற்சிகளை மேற்கொள்ளும் பிரபல அமெரிக்க சூப்பர் மார்க்கெட் செயின் வால்-மார்ட் (Wal-Mart) 

அதற்கு லாபி செய்ய பெருந்தொகை பணம் செலவு செய்துள்ள விஷயம் தற்செயலாக வெளியாகியுள்ளது.
வால்-மார்ட் சுமார் 1.5 மில்லியன் டாலர் பணத்தை, இந்தியாவில் ‘அரசியல் லாபி’ பண்ணுவதற்கு செலவிட்டுள்ளது.
அமெரிக்க சூப்பர் மார்க்கெட் செயின் இந்தியாவுக்குள் வருவதற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்புகள் இந்தியாவில் உள்ளன. அவற்றை ‘சமாளித்து’ தமது இலக்கை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வால்-மார்ட். இந்திய எதிர்ப்புகளை தகர்ப்பதற்காக ‘லாபியிங்’ பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருந்தது அந்த மெகா நிறுவனம்.
அரசியல்வாதிகளின் பாக்கெட்டுகளை பணத்தால் நிரப்புவது என்பதையே, இந்தியாவில் ‘லாபி’ பண்ணுவது என்று கௌரவமாக சொல்வார்கள்.

இந்த விவகாரம், தற்செயலாக எப்படி வெளியே வந்தது?
இது பான்ற மெகா நிறுவனங்கள் வெளிநாடுகளில் செலவு செய்யும் பணம் பற்றிய ரிப்போர்ட் ஒன்று அமெரிக்க செனட்டில், தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது, அமெரிக்க சட்டம். அந்த வகையில் வால்-மார்ட்டும், தாம் வெளிநாடுகளில் ‘லாபி’ செய்வதற்கு செலவிட்ட பணம் பற்றிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. வழமையாக இந்த அறிக்கையை மீடியாக்களில் யாரும் கண்டு கொள்வதில்லை.
ஆனால், எப்படியோ மீடியாக்களின் லைம் லைட் இந்த அறிக்கையில் வீழ்ந்துள்ளது. அதையடுத்தே, இந்தியாவில் அரசியல் லாபி செய்வதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்ட விவகாரம் வெளியே வந்துள்ளது.
கடந்த மாதம் 30-ம் தேதிவரை இந்த தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என கணக்கு காட்டியுள்ளது வால்-மார்ட். ஆனால், யாருக்கு கொடுத்தார்கள் என்பதை வெளியிட வேண்டியது, அமெரிக்க சட்டப்படி அவசியமில்லை.
புதுடில்லியில் யாருடைய பாக்கெட்டில் எல்லாம் இந்தப் பணம் பாய்ந்தது என்பதை, வால்-மார்ட் சூப்பர் மார்க்கெட் செயின் நிறுவனம் தாமாக வாய் திறந்து சொன்னால்தான் தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக